கோலாலம்பூர், 21 நவம்பர் (பெர்னாமா) -- காசா விவகாரத்தில் மலேசியாவின் நிலைப்பாடு மற்றும் ஐக்கிய நாடுகளின் சபை, ஐநா-விற்கு எதிரான சீர்த்திருத்தம், அமெரிக்கா உடனான நாட்டின் வர்த்தக நலன்களுக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது.
கருத்துச் சுதந்திரத்தை வலியுறுத்தும் வெளியுறவுக் கொள்கையில் மலேசியா தொடர்ந்து உறுதியாக இருப்பதோடு, மலேசியர்களின் குரல், உணர்வுகள் மற்றும் மனக்குறைகளையும் வெளிப்படுத்தும் பிரதிநிதியாகவும் செயல்படும் என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
"நாம் சுதந்திரமாக செயல்படுவதோடு சுதந்திர வர்த்தக அணுகுமுறையை பின்பற்றுவோம். அமெரிக்க நிறுவனங்களின் பங்கேற்பை நாங்கள் தடுக்கவில்லை. சீனா மற்றும் ரஷ்யாவுடனான நமது வர்த்தக உறவுகளையும் அவர்களால் தடுக்க முடியாது. இருப்பினும், நாம் புத்திசாலித்தனமாக செயல்பட வேண்டும். வெளியுறவு அமைச்சின் திறனும் அவர்களது அரசதந்திர சேவையும், சம்பந்தப்பட்ட நாட்டுடன் நல்லுறவைத் தொடர உதவும் என நான் நம்புகிறேன்", என்று அவர் கூறினார்.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவுடன் மலேசியா நல்லுறவைக் கொண்டிருந்தாலும், மற்ற நாடுகளுடன் உறவை ஏற்படுத்தி நிலைநிறுத்தும் மலேசியாவின் உரிமையைப் பிற நாடுகள் மறுக்க முடியாது என்றும் பிரதமர் கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)