ரெய்கியவிக், 21 நவம்பர் (பெர்னாமா) -- ஐஸ்லாந்தின் தலைநகர் ரெய்கியவிக் அருகே உள்ள எரிமலை ஒன்று நேற்று வெடித்து சிதறியது.
இந்த எரிமலை, கடந்த மூன்று ஆண்டுகளில் பத்தாவது முறையாக வெடித்ததாக அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் கூறியது.
எரிமலை வெடித்ததால் அதன் பிளம்புகள் வழிந்தோடும் காட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
ரெய்கியவிக் தென்மேற்கு 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சுமார் 3,800 மக்கள் வசிக்கும் பகுதியில் இந்த எரிமலை உள்ளது.
எரிமலை தொடர்ந்து வெடிக்கலாம் என்று நம்பப்படுவதால் பாதுகாப்பு கருதி அருகில் வசிப்பவர்கள் மாற்று இடங்களுக்குச் சென்றுள்ளனர்.
சாம்பல் புகை வானில் பரவினாலும் வான்வழிப் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படவில்லை.
இருப்பினும், இந்த எரிமலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)