பொது

தியோ பெங் ஹோக் மரண விசாரணை; புதிய சாட்சிகளைப் பெறும் சாத்தியத்தை பிடிஆர்எம் நிராகரிக்கவில்லை

22/11/2024 05:44 PM

கோலாலம்பூர், 22 நவம்பர் (பெர்னாமா) -- நேற்று, நீதிமன்றத்தில் வழங்கிய உத்தரவைத் தொடர்ந்து, தியோ பெங் ஹோக்கின் மரணம் தொடர்பான விசாரணைக்கு உதவக்கூடிய புதிய சாட்சிகளை தற்போதுள்ள தரப்பிடமிருந்து பெறுவதற்கான சாத்தியக் கூறுகளை அரச மலேசிய போலீஸ் படை, பிடிஆர்எம் நிராகரிக்கவில்லை.

வழக்கு தொடர்பான விசாரணையை முடிக்க பிடிஆர்எம், தேசிய சட்டத்துறையை அணுகும் என்று தேசிய போலீஸ் படைத் தலைவர் டான் ஶ்ரீ ரசாருடின் ஹுசேன் கூறினார்.

"நாங்கள் உண்மையில் யுஎஸ்ஜெதி-ஐ அமைந்துள்ளோம், விசாரணையை நடத்தி முடிப்பதற்கு எங்களுக்கு வழங்கிய அறிவுறுத்தலின்படி. புதிய சாட்சியங்களை வழங்க முன்வரக்கூடிய சாட்சிகள் இருந்தால் நாங்கள் புதிய ஆதாரங்களைப் பெற முயற்சிக்கிறோம்," என்றார் அவர்.

இன்று, கோலாலம்பூரில் உள்ள போலீஸ் பயிற்சி மையம் புலாபோலில் நடைபெற்ற 2024-ஆம் ஆண்டிற்கான போலீஸ் பயிற்சி அணிவகுப்பில் கலந்து கொண்டபோது ரசாருடின் செய்தியாளர்களிடம் பேசினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)