விளையாட்டு

டேவிஸ்: அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை சந்திக்கிறது இத்தாலி

22/11/2024 07:34 PM

மலாகா, 22 நவம்பர் (பெர்னாமா) -- டேவிஸ் கிண்ண டென்னிஸ் போட்டி..

இன்று காலை நடந்த காலிறுதி ஆட்டத்தில், இத்தாலி 2-1 என்று அர்ஜெண்டினாவை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதிப் பெற்றது.

நடப்பு வெற்றியாளரான இத்தாலி அக்கிண்ணத்தைத் தற்காத்துக்கொள்ளும் வகையில் உலகின் முதல் நிலை ஆட்டக்காரரான யானிக் சின்னர் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவுகளில் வெற்றி பெற்றுள்ளார்.

இந்த பருவத்தில், முதல் இரண்டு கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற யானிக் சின்னர், கடந்த வாரம் தோல்வியின்றி ATP தொடரின் இறுதி ஆட்டத்தையும் வென்றார்.

அந்த உத்வேகத்துடன் டேவிஸ் கிண்ண தொடரில் களமிறங்கிய சின்னர், ஒற்றையர் பிரிவில், 6-2, 6-1 என்று நேரடி செட்களில், அர்ஜெண்டினாவின் செபாஸ்டியன் பேஸ் தோற்கடித்தார்.

அதற்கு முந்தைய தனிநபர் பிரிவில், பிரான்சிஸ்கோ செருண்டோலோ 6-4, 6-1 என்ற புள்ளிகளில் இத்தாலியின் லோரென்சோ முசெட்டியை எளிதில் வீழ்த்தினார்.

இதனிடையே, வெற்றியாளரை நிர்ணயிக்கும் இரட்டையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில், பாவி - மேட்டியோ பெரெட்டினி ஜோடி, 6-4, 7-5 என்ற நேரடி செட்களின் வழி அர்ஜெண்டினாவின் ஆண்ட்ரெஸ் மோல்டெனி - மாக்சிமோ கோன்சலஸ் இணையரை தோற்கடித்தனர்.

சின்னரின் வருகையால், டேவிஸ் கிண்ணத்தை வெல்லும் இலக்கில், இத்தாலி மூன்றாம் ஆண்டாக அரையிறுதிக்குச் செல்லும் வாய்ப்பை பெற்றுள்ளது.

அதில் இத்தாலி ஆஸ்திரேலியாவை சந்திக்கவுள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)