கோலாலம்பூர், 22 நவம்பர் (பெர்னாமா) -- தங்களது மாணவர்கள் மலேசியாவில் இருந்து திவெட் எனப்படும் தொழில்நுட்பம் மற்றும் தொழில் பயிற்சி திட்டங்களை கற்றுக் கொள்ள வியட்நாம் ஆர்வம் காட்டுகிறது.
வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழுவின் பொதுச்செயலாளர் டோ லாமுடன் வெள்ளிக்கிழமை நடந்த சந்திப்பில்இந்த எண்ணத்தை வெளிப்படுத்தியதாக துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அஹ்மட் சாஹிட் ஹமிடி தெரிவித்தார்.
உயர்கல்வி மற்றும் திவெட்டில் மலேசியா ஒரு குறிப்பிட்ட நிலையை அடைந்துவிட்டதை அவர்கள் அறிவார்கள் என்று சாஹிட் கூறினார்.
மாணவர்கள் பரிமாற்றம் குறித்து தாங்கள் பேசிக் கொண்டதாக அவர் தெரிவித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)