உலகம்

லெபனான் - இஸ்ரேல் மோதல்களினால் மனிதாபிமான நெருக்கடி

23/11/2024 05:36 PM

சுவிட்சர்லாந்து, 23 நவம்பர் (பெர்னாமா) -- லெபனான் மற்றும் இஸ்ரேலுக்கு இடையிலான நீண்டகால மோதல்கள், லெபனானில் நிலவும் மனிதாபிமான நெருக்கடிக்கு காரணம் என்று பல ஐ.நா சபையின் நிறுவனங்கள் வெள்ளிக்கிழமை எச்சரித்துள்ளன.

லெபனானில் இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கைகள் தொடர்கின்றன.

இதனால், அங்கு மனிதாபிமான நெருக்கடி மோசமடைந்து வருவதால் மக்கள் மத்தியில் பதற்றம் நிலவுகிறது.

நேற்று, ஜெனீவாவில் ஐ.நா. அலுவலகம் செய்தியாளர்கள் சந்திப்பு கூட்டத்தை நடத்தியது.

இதில் உலக சுகாதார நிறுவனம் WHO, U-N-H-C-R எனப்படும் அகதிகளுக்கான ஐ.நா. ஆணையம், ஐ.நா மனிதநேய அமைப்பு OCHA ஆகியவை கலந்து கொண்ட போது இதனைத் தெரிவித்தன.

இன்று வரை லெபனான் முழுவதும் சுமார் 10 லட்சம் பேர் இடம்பெயர்ந்துள்ள நிலையில் கிட்டத்தட்ட ஆறு லட்சம் பேர் சிரியா எல்லையைக் கடந்துள்ளதாக ஐ.நா நிறுவனங்களின் தரவுகள் கூறுகின்றன.

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]