உலகம்

காசா தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மருத்துவர்கள், தாதியர்கள் பலி

25/11/2024 06:19 PM

காசா, 25 நவம்பர் (பெர்னாமா) -- காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மருத்துவர்கள், தாதியர்கள் கொல்லப்பட்டனர்.

இதனை உள்ளூர் அதிகாரிகள் உறுதிப்படுத்தியதாக அனடோலு நிறுவனம் கூறியது. கடந்த ஆண்டு முதல் காசா மீது இஸ்ரேல் கடுமையான தாக்குதலை நடத்தி வருகிறது.

இந்த தாக்குதலில் 1000க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், தாதியர்கள் கொல்லப்பட்டனர். மேலும் மருத்துவப் பொருட்கள், சுகாதாரப் பிரதிநிதிகள் மற்றும் நூற்றுக்கணக்கான அறுவை சிகிச்சை நிபுணர்கள் காசாவிற்குள் நுழைவதையும் இஸ்ரேலிய இராணுவம் தடுத்தது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே போர் தொடங்கி ஓராண்டை தாண்டிவிட்டது. ஆனால் இஸ்ரேல் தனது தாக்குதலை குறைத்தபாடில்லை. இதற்கிடையே ஹமாசுக்கு ஆதரவாக ஹிஸ்புல்லா மற்றும் ஈரான் தரப்பில் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.

அவற்றுக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தக்க பதிலடி கொடுத்து வருகிறது. இந்த நிலையில் இஸ்ரேல் மீது 340 ஏவுகணை மற்றும் டிரோன்களை கொண்டு ஹிஸ்புல்லா அமைப்பு தீவிர தாக்குதல் நடத்தி உள்ளது. இதில் இஸ்ரேலின் முக்கிய நகரங்கள் தகர்க்கப்பட்டுள்ளது. உயிரிழப்புகள் ஏற்படவில்லை என்றாலும், பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.

-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)