புது டில்லி, 26 நவம்பர் (பெர்னாமா) -- அண்மையில், அமெரிக்காவில் மோசடி மற்றும் கையூட்டு கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்ட தொழிலதிபர் கௌதம் அதானிக்கு எதிராக இந்தியாவின் பிரதான எதிர்க்கட்சியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள், திங்கட்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த வாரம் குற்றம் சாட்டப்பட்டதைத் தொடர்ந்து அவரின் நிறுவனப் பங்குகள் சரிவுக் கண்டாலும், அரசாங்கம் அத்தொழிலதிபரைத் தற்காத்து வருவதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் குற்றம் சாட்டினர்.
பிரதமர் நரேந்திர மோடிக்கு நெருக்கமான அதானியை உடனடியாக கைது செய்யக் கோரி புது டெல்லி நாடாளுமன்றக் கட்டிடத்திற்கு அருகே காங்கிரஸ் கட்சியின் இளைஞர் அணி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளது.
“மோடியும் அதானியும் ஒன்று”, “மோடியின் நட்பு தேசத்தையே பாதிக்கிறது” என்ற சுலோகங்கள் அடங்கிய பதாதைகளைச் சிலர் ஏந்தியிருந்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிலரைப் போலீசார் கைது செய்தனர்.
அதானி மீதான குற்றச்சாட்டுகள் குறித்து எதிர்கட்சிகள் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப முயன்றபோது இடையூறுகளால் அந்நடவடிக்க ஒத்திவைக்கப்பட்டது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)