கோலாலம்பூர், 26 நவம்பர் (பெர்னாமா) -- 'மைசலாம்' திட்டத்தின் அமலாக்கத்தை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்க அரசாங்கம் ஆராய்ந்து வருகிறது.
'மைசலாம்' திட்டம், 2019 தொடங்கி 2023ஆம் ஆண்டு வரை ஐந்து ஆண்டுகளுக்கு மட்டுமே மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டிருந்தது.
தற்போது 2024ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் கீழ், 'மைசலாம்' திட்டம் 2025ஆம் ஆண்டு வரை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டதாக இரண்டாவது நிதி அமைச்சர் டத்தோ ஶ்ரீ அமீர் ஹம்சா அசிசான் தெரிவித்தார்.
''நிதி அமைச்சும் பேங்க் நெகாரா மலேசியாவும் மைசலாம் திட்டத்தை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்க ஆராய்ந்து வருகின்றன. அதேவேளையில், பி40 குழுவினர் நீண்ட காலத்திற்கு பெறக்கூடிய காப்புறுதி மற்றும் தக்காஃபுல் ஏற்படுத்த புதிய திட்டத்தையும் வகுக்கிறது, '' என்றார் அவர்.
இன்று, மக்களவையில் சபா பெர்னாம் நாடாளுமன்ற உறுப்பினர் கலாம் சாலன் எழுப்பியக் கேள்விக்கு டத்தோ ஶ்ரீ அமீர் ஹம்சா அவ்வாறு பதிலளித்தார்.
2025ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் மூலம், பி40 குழுவினருக்கு வழங்கப்படும் பாதுகாப்பு வசதிகளின் செலவிற்கான ஒரு பகுதிக்கு நிதியளிக்க பற்றுச்சீட்டுகளை வழங்குவதற்கு அரசாங்கம் ஆறு கோடி ரிங்கிட்டை ஒதுக்கியுள்ளதாக அவர் விளக்கினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)