பொது

பதின்ம வயதினர்களிடையே இனிப்பு பானங்களின் பயன்பாடு குறைந்துள்ளது.

26/11/2024 07:46 PM

கோலாலம்பூர், 26 நவம்பர் (பெர்னாமா) -- கடந்த ஐந்து ஆண்டுகளாக நாட்டில் அமல்படுத்தப்பட்ட இனிப்பு பானங்கள் மீதான வரியைத் தொடர்ந்து, பதின்ம வயதினர்களிடையே அவற்றின் பயன்பாடு 16.4 விழுக்காடாக குறைந்துள்ளது.

2023-2030ஆம் ஆண்டுகளில் மலேசிய சிறார்கள் மத்தியில் ஊட்டச்சத்து குறைப்பாட்டை எதிர்த்து போராடுவதற்கான வியூக திட்டத்தின் முயற்சிகளில் இதுவும் ஒன்றாகும் என்று துணைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மட் சாஹிட் ஹமிடி தெரிவித்தார்.

அதிக இனிப்பு கொண்ட பானங்களுக்கு அரசாங்கம் கலால் வரியை அமல்படுத்தியதோடு அதனை நீட்டித்தது.

மலேசியாவில் இனிப்பு பானங்கள் வரி நிலை அடிப்படையில், 40 சென் அதிகரித்துள்ளது.

இதனால், சந்தை விலையில் 2.24 விழுக்காடு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையின் வழி அவர் இதனைத் தெரிவித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)