கம்பாலா, 29 நவம்பர் (பெர்னாமா) -- கிழக்கு உகாண்டாவில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் பல கிராமங்கள் புதையுண்டன.
இச்சம்பவத்தினால் இதுவரை 15 பேர் மடிந்துள்ளதாகவும் 100-க்கும் அதிகமானோர் சகதி வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.
தலைநகர் கம்பாலாவில் இருந்து 300 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள புலாம்புலி எனும் மாவட்டத்தில் இப்பேரிடம் நிகழ்ந்தது.
சுமார் 40 வீடுகள் மண்ணில் புதையுண்டதாக அந்நாட்டின் செஞ்சிலுவை சங்கம் கூறியது.
மேலும் பல குடியிருப்புகள் சேதமடைந்துள்ளன.
காணாமல் போன 113 பேரை தேடி மீட்கும் பணி தொடரப்பட்டு வருகிறது.
இதுவரை 15 சடலங்கள் மீட்கப்பட்டிருக்கும் நிலையில் மொத்த உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
மண் சரிவினால் சாலைகள் துண்டிக்கப்பட்டிருப்பதால் மீட்புப் பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளன.
-- பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]