BREAKING NEWS   Malaysia conveys deepest appreciation, welcomes flood aid from Pakistan in honour of friendship between both countries - PM Anwar | 
 உலகம்

கடுமையான புயல் தாக்கும் அச்சுறுத்தலால் தென் இந்தியாவில் பள்ளிகளும் கல்லூரிகளும் மூடப்பட்டன

30/11/2024 06:19 PM

இந்தியா, 30 நவம்பர் (பெர்னாமா) -- தென் இந்தியாவை கடுமையான புயல் தாக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளதால், அங்குள்ள பள்ளிகளும் கல்லூரிகளும் மூடப்பட்டுள்ளன.

471 பேர் பாதுகாப்பு மையங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

ஃபெஙல் புயலினால், சனிக்கிழமை தென் இந்தியாவில் மணிக்கு 70இல் இருந்து 80 கிலோமீட்டர் வேகத்திற்கு காற்று வீசும் என்று இந்திய வானிலை பிரிவு குறிப்பிட்டுள்ளது.

மேலும், ஒரு மீட்டர் உயரத்திற்கு அலைகள் எழும் என்றும், மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இப்புயலினால், தாழ்வான கரையோரப் பகுதிகளில் வெள்ளம் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையைக் கடந்து இந்தியாவை நோக்கி நகர்ந்த ஃபெஙல் புயலினால், ஆறு குழந்தைகள் உட்பட குறைந்தது 12 பேர் உயிரிழந்தனர்.

புதைபடிவ எரிபொருட்களை எரிப்பதால் ஏற்படும் காலநிலை மாற்றத்தினால், ஃபெஙல் சூறாவளி வலுவடையும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)