பொது

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உதவிகளை மேற்கொள்ள, போலீஸ் படையைச் சேர்ந்த 1,672 அதிகாரிகள் & உறுப்பினர்கள்

02/12/2024 04:58 PM

புத்ராஜெயா, 02 டிசம்பர் (பெர்னாமா) -- நாடு முழுவதும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உதவி நடவடிக்கைகளை மேற்கொள்ள, போலீஸ் படையைச் சேர்ந்த 1,672 அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்களுடன் 230 வாகனங்களையும் அவசர உபகரணங்களையும் உள்துறை அமைச்சு அனுப்பியுள்ளது.

ஒரு ஹெலிகாப்டர் உட்பட 152 நான்கு சக்கர வாகனங்கள், 68 படகுகள், 51 லாரிகள், 15 ரோந்து வாகனங்கள், மற்றும் 13 வேன்களை போலீஸ் படை உதவி நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தி வருகிறது.

706 தற்காலிக நிவாரண மையங்கள் உட்பட வெள்ளம் ஏற்பட்ட பகுதிகளில் மலேசியத் தொண்டூழிய துறை, ரெலாவின் 818 பேர் பணிக்கு அமர்த்தப்பட்டிருக்கின்றனர்.

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களை வெளியேற்றும் நடவடிக்கைகள், பேரிடர் இடங்களில் போக்குவரத்து கட்டுப்பாடு, ரோந்து மற்றும் பேரிடர் ஆபத்து உள்ள பகுதிகளில் கண்காணிப்பு ஆகிய நடவடிக்கைகளில் போலீஸ் மற்றும் ரேலா உறுப்பினர்களும் ஈடுபடுவார்கள் என்று, உள்துறை அமைச்சு தனது முகநூலில் பதிவிட்டுள்ளது.

போலீஸ் மற்றும் ரேலா-வை தவிர்த்து, உள்துறை அமைச்சின் கீழ் உள்ள மலேசிய குடிநுழைவுத் துறை, மலேசிய சிறைத் துறை, தேசிய பதிவுத் துறை, ஆகிய துறைகளும் உதவி நடவடிக்கைகளில் ஈடுபடும் என்று அப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)