பொது

முன்னாள் உறுப்பினர்கள் மீண்டும் இணைவதற்கான விண்ணப்பத்தை அம்னோ பெறவில்லை

04/12/2024 02:46 PM

புத்ராஜெயா , 04 டிசம்பர் (பெர்னாமா) -- எந்தவொரு முன்னாள் உறுப்பினரும் அம்னோவில் மீண்டும் இணைவதற்கான விண்ணப்பத்தை, அக்கட்சி பெறவில்லை.

விண்ணப்பத்தைப் பெற்றால், அதன் தொடர்பில் அடுத்த அம்னோ உச்சமன்றக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று அக்கட்சியின் தலைவர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மட் சாஹிட் ஹமிடி தெரிவித்தார்.

''இதுவரை விண்ணப்பம் எதுவும் இல்லை. எனவே, நிர்வகிப்பு செயற்குழுவிடம் விண்ணப்பம் இருந்தால் மட்டுமே அது உச்சமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்,'' என்றார் அவர்.

கடந்த நவம்பர் 25ஆம் தேதி நடைபெற்ற அம்னோவின் உச்சமன்றக் கூட்டத்தில் பாசிர் சாலாக் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் டத்தோ ஶ்ரீ தஜூடின் அப்துல் ரஹ்மானின் இடைநீக்கத்தை மீட்டுக் கொள்வது உடனடியாக அமலுக்கு வருவதாக இதற்கு முன்னர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)