கோலாலம்பூர், 03 நவம்பர் (பெர்னாமா) -- மலேசிய பூப்பந்து சங்கம் பி.ஏ.எம் தற்போது மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் எஸ்.பி.ஆர்.எம் விசாரணையை எதிர்நோக்கி இருக்கின்றது.
அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் அந்த சங்கத்தின் தேர்தல் காரணமாக, இந்த விசாரணை நடத்தும் சாத்தியத்தை தாம் மறுக்கவில்லை என்று பி.ஏ.எம் இடைக்காலத் தலைவர் டத்தோ வி. சுப்ரமணியம் கூறியுள்ளார்.
அதனால், பி.ஏ.எம் உலுக்கிய பிரச்சனையால் தாம் ஆச்சரியப்படவில்லை என்றும் அதற்கு பல காரணங்கள் இருக்கலாம் என்றும் அவர் கூறினார்.
எஸ்.பி.ஆர்.எம்-ஆல் அழைக்கப்படும் முறைக்காக காத்திருக்கும் ஒன்பது சாட்சிகளின் அறிக்கை குறித்து கருத்து தெரிவித்த அவர், அது தொடர்பில் எந்த தகவலும் இல்லை என்றார்.
தொழில் ரீதியாக தங்கள் கடமைகளைச் செய்த எஸ்.பி.ஆர்.எம் அதிகாரிகளுக்கு தாங்கள் முழு ஒத்துழைப்பை வழங்கியதாக அச்சங்கம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தெரிவித்துள்ளது.
அச்சங்கத்தின் உயர் அதிகாரி தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் நோக்கில் எஸ்.பி.ஆர்.எம் வருகை புரிந்ததாக அறியப்படாத நபரிடமிருந்து முன்னதாக தகவல் கிடைத்திருக்கின்றது.
சம்பந்தப்பட்ட உயர் அதிகாரி ஒருவர், வாரிய அனுமதியின்றி கூடுதல் அலவன்ஸ் பெற்றதாக புகாரளிக்கப்பட்டுள்ளது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)