கூலாய், 07 ஜனவரி (பெர்னாமா) -- இன்று, தாமான் இம்பியானா பகுதியில் இன்று பிறந்ததாக நம்பப்படும் ஒரு சிசு மற்றும் ஒரு பெண்ணின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன.
பிரசவக் சிக்கலால் உயிரிழந்ததாக நம்பப்படும் அப்பெண், பிறந்த ஆண் குழந்தையை அணைத்தவாறு இறந்துக் கிடந்துள்ளார்.
காலை மணி எட்டு அளவில் இருவரின் சடலத்தையும் பார்த்த மக்கள் போலீசிடம் புகார் அளித்துள்ளனர்.
அப்பெண் இந்தோனேசியாவைச் சேர்ந்தவர் என்று நம்பப்படுகிறது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)