விளையாட்டு

இத்தாலிய சூப்பர் கிண்ணத்தை கைப்பற்றியது ஏ.சி மிலான் வெற்றி

07/01/2025 08:15 PM

ரியாத், 07 ஜனவரி (பெர்னாமா) -- இத்தாலிய சூப்பர் கிண்ண காற்பந்து போட்டியின் நடப்பு வெற்றியாளரான இண்டர் மிலானிடம் இருந்து அக்கிண்ணத்தை கைப்பற்றியது ஏ.சி மிலான். 

இன்று அதிகாலையில் நடைபெற்ற ஆட்டத்தில் அது 3-2 என்ற கோல்களில்இண்டர் மிலானை தோற்கடித்துள்ளது. 

ரியாத்தில் உள்ள கிங் சவுத் பல்கலைக்கழக அரங்கில் விளையாடிய மிலானின் குறிக்கோளை வழங்கப்பட்ட  கூடுதல் நிமிடத்தில் கோலாக்கி டாமி ஆபிரகாம் ஆட்டத்தை நிறைவு செய்தார். 

தொடர்ந்து நான்காவது  முறையாக அக்கிண்ணத்தை தக்கவைத்துக் கொள்ள இண்டர் மிலான் போராடினாலும், அதன் முயற்சிகள் பலனளிக்காமல் போனது. 

முதல் பாதியின் இறுதி நிமிங்களில் அது தொடர்ந்து இரு கோல்கள் அடித்து முன்னிலை வகித்தது. 

ஆனால், இரண்டாம் பாதியை முழுவதுமாக ஆக்கிரமித்த ஏ.சி மிலான் மூன்று கோல்கள் அடித்து அதன் வெற்றியை உறுதி செய்தது. 

-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)