சிறப்புச் செய்தி

மாணவர்களுக்குச் சிறப்பு ஆலோசனை சேவை; பி.பி.பி. அறிமுகப்படுத்தியது

02/03/2026 06:46 PM

கோலாலம்பூர், மார்ச் 02 (பெர்னாமா) -- பாலர் பள்ளி முதல் உயர்கல்வி வரையிலான ஆலோசனை மற்றும் கல்வி வழிகாட்டுதல்களை வழங்கும் பொருட்டு, மக்கள் முற்போக்குக் கட்சி, பி.பி.பி, பி.பி.பி Education Careline எனும் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.

உயர் கல்வி தேர்வுகள், பள்ளி மாற்றங்கள் மற்றும் கல்வி நிதி குறித்த தகவல்கள் இச்சேவையில் அடங்கும் என்று டத்தோ டாக்டர் ஜெ. லோக பாலா மோகன் தெரிவித்தார்.

''பாலர் பள்ளி முதல் உயர்கல்வி வரையில் கல்வி உதவிக்கான அழைப்பு சேவையை நாங்கள் வெற்றிகரமாக அறிமுகப்படுத்தியுள்ளோம். எனவே, இந்தத் துறையில் உள்ள நிபுணர்களின் தன்னார்வ உதவியின் மூலம் இந்த சேவை உருவாக்கப்பட்டது,'' என்றார் அவர்.

நேற்று கோலாலம்பூர் அச்சேவை அறிமுகப்படுத்தியப் பின்னர், டத்தோ லோக பாலா செய்தியாளர்களிடம் பேசினார்.

019-2212131 எனும் சிறப்பு தொலைபேசி எண் வழி பெறப்படும் ஒவ்வொரு கேள்விக்கும் தேர்வு செய்யப்பட்ட நிபுணர்கள் பதிலளிப்பார்கள் என்று, அவர் விவரித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)