விளையாட்டு

ஆஸ்திரேலிய பொது டென்னிஸ்; 3ஆம் சுற்றுக்கு முன்னேறினார் ஃப்ரிட்ஸ்

16/01/2025 05:58 PM

மெல்போர்ன், 16 ஜனவரி (பெர்னாமா) -- சிலியின் கிறிஸ்டியன் கேரினை நேரடி செட்களில் வீழ்த்தி அமெரிக்காவின் டெய்லர் ஃப்ரிட்ஸ் மூன்றாம் சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

இன்று, மார்கரெட் கோர்ட் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தின் முதல் மற்றும் இரண்டாம் செட்களில் டெய்லர் ஃப்ரிட்ஸ் முறையே 6-2, 6-1 என்று மிக எளிதில் வெற்றிப் பெற்றார்.

அதே உத்வேகத்துடன் மூன்றாம் சுற்றில் விளையாடிய அவர், 6-0 என்ற நிலையில் கேரினை வீழ்த்தி தமது வெற்றியை உறுதி செய்து கொண்டார்.

அவர்களின் ஆட்டம் ஒரு மணி நேரம் 22 நிமிடங்கள் வரை மட்டுமே நீடித்தது.

உலகத் தரவரிசையில், நான்காம் இடத்தில் இருக்கும் ஃப்ரிட்ஸ் , அடுத்த ஆட்டத்தில் உலகின் 41வது இடத்தில் இருக்கும் பிரான்சின் கேல் மோன்ஃபில்சைச் சந்திக்கவுள்ளார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)