உலகம்

மின் உற்பத்தி ஆலையில் தீ; அப்பகுதி மக்கள் வெளியேற உத்தரவு

17/01/2025 07:30 PM

கலிபோர்னியா, 17 ஜனவரி (பெர்னாமா) -- கலிபோர்னியாவில் உள்ள, விஸ்ட்ரா குழும நிறுவனத்தின் மின் உற்பத்தி ஆலையில் ஏற்பட்ட தீச்சம்பவத்தைத் தொடர்ந்து, அதன் அருகிலுள்ள பகுதிகளை காலி செய்யுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட மின் உற்பத்தி ஆலையில், எரிசக்தி சேமிப்பு கிடங்கில் தீ பரவியது கண்டறியப்பட்டதாக விஸ்ட்ரா  மேலும் கூறியது.

இச்சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சிகள், பதிவு செய்திருந்த காணொளிகள், மின் உற்பத்தி ஆலை, தீப்பற்றி எரிவதைக் காட்டின.

ஆலையில் உள்ள ஓர் எரிசக்தி சேமிப்பு நிலையத்தில் தீ பரவத் தொடங்கியது கண்டறியப்பட்டுள்ளது.

தீச்சம்பவத்தைத் தொடர்ந்து, அப்பகுதியில் வசிக்கும் நூற்றுக்கணக்கானோர், அங்கிருந்து வெளியேறும்படியும் உத்தரவிடப்பட்டதாக மாவட்ட அதிகாரிகள் கூறினர்.

அதோடு, அங்குள்ள நெடுஞ்சாலையின் ஒரு பகுதியும் மூடப்பட்டுள்ளது.


-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)