லண்டன், 18 ஜனவரி (பெர்னாமா) -- இனம், மதம் மற்றும் ஊழல்களில் இருக்கும் தீவிரவாதத்தை மலேசியாவின் இளைய மற்றும் புதிய தலைமுறையினர் துணிச்சலாக நிராகரிக்க வேண்டும்.
பல்வேறு இனங்களோடு அமைதியாக இருக்கும் மலேசியாவை, இன மற்றும் மத தீவிரவாத அடிப்படையில் நாட்டை பிளவுபடுத்த சில தரப்புகள் முயற்சிப்பதாக பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறியுள்ளார்.
முஸ்லிம்கள், மலாய்க்காரர்கள் மற்றும் பூமிபுத்ரா என்ற பெரும்பான்மை அடிப்படையில் உரிமைகளை அரசியலமைப்பு உறுதிப்படுத்தும் நிலையில், இன அடிப்படையிலான கொள்கைகளைப் பயன்படுத்தி, இதர இனங்களுக்கு எதிராக வெறுப்புணர்வை தூண்டும் நடவடிக்கைளை சில தரப்புகளும் மேற்கொள்வதாக அன்வார் கூறினார்.
இங்கிலாந்துக்கு ஐந்து நாள்கள் அலுவல் பயணம் மேற்கொண்டிருக்கும் பிரதமர் செய்தியாளர்கள் சந்திப்பில் அதனைக் கூறியுள்ளார்.
வளர்ச்சியைக் குறிக்கோளாக கொண்டு தொடர்ந்து மேம்பாடு அடைந்து வந்த மலேசியா, பலவீனமான நிர்வாகம் மற்றும் பேராசை காரணமாக பின்னடவைச் சந்தித்தாகவும் அவர் குறிப்பிட்டார்.
பல இனங்கள் வாழும் நாட்டில் சகிப்புத்தன்மையின் அவசியத்தைத் தவிர, ஊழலையும் மதவெறியையும் தகர்த்து, இளைஞர்கள் வருங்காலத்தைப் துணிச்சலோடு எதிர்கொள்ள வேண்டும் என்று தாம் விரும்புவதாக பிரதமர் விளக்கினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)