தமிழ்நாடு, 18 ஜனவரி (பெர்னாமா) -- தமிழ்நாடு முழுவதிலும் வியாழக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகளில் மாடுமுட்டி குறைந்தது எழுவர் உயிரிழந்தனர்.
போட்டியாளர்களைத் தவிர்த்து உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் பார்வையாளர்கள் ஆவர்.
இச்சம்பவத்தில் மேலும் 400க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
அவர்களில் புதுக்கோட்டையில் மட்டும் சுமார் 150 பேர் காயத்திற்கு ஆளாகினர்.
அதோடு அலங்கநல்லூர் ஜல்லிகட்டு போட்டியில் 17 மாடுகளின் உரிமையாளர்கள், 33 பார்வையாளர்கள் உட்பட 76 பேர் காயமடைந்தனர்.
இந்த ஜல்லிக்கட்டு போட்டிகளின்போது வெவ்வேறு இடங்களில் இரண்டு காளை மாடுகளும் உயிரிழந்தன.
புதுக்கோட்டையில் நடைபெற்ற போட்டியில் ஒரு காளை மாடும் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிராவயல் கிராமத்தில் காளை மாடும் அதன் உரிமையாளரும் உயிரிழந்தனர்.
அதிகமான உயிரிழப்புகளும் காயங்களும் பந்தய இடத்திற்கு வெளியிலும்,
ஆயிரக்ககணக்கான பார்வையாளர்களுக்கு முன்னிலையில்..
போட்டிக்குப் பின்னர் வழக்கமாக மாடுகளின் உரிமையாளர்கள் அவற்றை வைத்திருக்கும் இடத்திலுமே நிகழ்ந்துள்ளன.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)