பொது

மலேசிய தொழில்நுட்ப திறமையை குறைத்து மதிப்பிடாதீர்கள் - பிரதமர்

18/01/2025 05:21 PM

லண்டன், 18 ஜனவரி (பெர்னாமா) -- வெளிநாடுகளில் இருக்கும் மலேசியர்கள் சொந்த நாட்டில் உள்ள தொழில்நுட்ப முன்னேற்றம், நிபுணத்துவம் மற்றும் அதன் திறமைகளைக் குறைத்து மதிப்பிடக்கூடாது என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தினார்.

மலேசியாவில் நீண்ட காலமாக வர்த்தக துறையில் ஈடுப்பட்டுள்ள பல்வேறு உலகலாவிய முதலீட்டாளர்கள், இங்குள்ள தொழில்நுட்பத்தின் ஆதிக்கத்தைத் தொடர்ந்து அங்கீகரித்து வருவதால்தான் அவர்கள் இங்கு முதலீடு செய்து வருவதாக அன்வார் மேலும் கூறினார்.

ஜெர்மனியின் மிகப்பெரிய மின்னியல் உபரிப்பாகத் தயாரிப்பு உற்பத்தியாளரான இன்ஃபினியன் டெக்னாலஜிஸ் ஏஜியை மேற்கோள் காட்டி பேசிய டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்,அண்மையில் அவர்கள் நாட்டில் 600 கோடி யூரோ முதலீடு செய்ததாகக் கூறினார்.

காரணம், ஜெர்மனியைத் தவிர மலேசியாவின் நிபுணத்துவம், தொழில்நுட்பம் மற்றும் திறமையின் மீது அவர்கள் நம்பிக்கை கொண்டிருந்ததாக டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

வய்.தி.எல், ஏகோ வோர்ல்ட், சைம் டார்பி மற்றும் திஎன்பி போன்ற மலேசிய நிறுவனங்கள் இங்கிலாந்தில் தங்களின் சிறந்த அடைவுலை உறுதி செய்துள்ளன.

மேலும், அவற்றின் தொழில்நுட்பம் மற்றும் மனிதவளம் காரணமாக பொது குத்தகைகள் மூலம் பல திட்டங்களை அவர்கள் வெற்றிகரமாக கைப்பற்றியுள்ளனர்.

அதோடு, நாட்டில் உள்ள உயர்தர உள்ளுர் பல்கலைக்கழகங்களில் ஒரு லட்சத்து 40,000 வெளிநாட்டு மாணவர்கள் பயில்வதாகவும் பிரதமர் கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)