கோலாலம்பூர், 18 ஜனவரி (பெர்னாமா) -- Future Health for All, FH4A என்ற முன்னோடி திட்டத்தின் மூலம், மக்களின் சுகாதார அறிவையும், நாட்டின் சுகாதார சேவை தரத்தையும் மேம்படுத்துவதற்கு 5ஜி இணைப்பின் ஆற்றல் பயன்படுத்தப்படும்.
மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம், எம்சிஎம்சி ஏற்பாட்டிலான அத்திட்டம், சுகாதார சேவை அனைத்தையும் உள்ளடக்கி சரிசமமாகப் பெறப்படுவதை உறுதிசெய்ய தற்போதைய தொழில்நுட்பமும் 5ஜி இணைப்பும் பயன்படுத்தப்படவிருக்கிறது என்று தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்தார்.
தொடக்கமாக, FH4A முன்னோடி திட்டம் கோலாலம்பூர், சிலாங்கூர், நெகிரி செம்பிலான், பகாங், பேராக் மற்றும் ஜோகூர் ஆகிய ஆறு மாநிலங்களில், 20 இடங்களில் மேற்கொள்ளப்படவிருப்பதாக ஃபஹ்மி குறிப்பிட்டார்.
இன்று, கோலாலம்பூரில் “Future Health For All” என்ற முன்னோடி திட்டத்தைத் தொடக்கி வைத்தப் பின்னர் அவர் அவ்வாறு கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)