பொது

ஏ.ஐ கருவிகளில் முதலீடு செய்ய ஊடகங்களுக்கு வலியுறுத்து

19/12/2025 05:26 PM

ஜார்ஜ்டவுன், டிசம்பர் 19 (பெர்னாமா) -- இதனிடையே, இதே நிகழ்ச்சியில் பேசிய மலேசிய தேசிய செய்தி நிறுவனம், பெர்னாமா தலைவர் டத்தோ செரி வோங் சுன் வாய், அதிகரித்து வரும் நிலையான செலவுகளுக்கு எதிரான குறைந்த லாபம் உட்பட, அதிகமான சவால்களை ஊடகங்கள் எதிர்கொண்டு வரும் நிலையில், செயற்கை நுண்ணறிவு, ஏ.ஐ கருவிகளில் முதலீடு செய்வதற்கு வலியுறுத்தினார்.

காணொளிகள், கதைகள், பதிவுகள், நிகழ்ச்சிகள் மற்றும் வெவ்வேறு தளங்களுக்கான கூடுதல் பதிப்புகள் போன்ற அதிக உள்ளடக்கங்களை உருவாக்கும் அதேவேளையில், மனிதவளத்தைக் குறைக்கவும் ஏ.ஐ உதவுவதாக, அவர் தெரிவித்தார்.

''சிறந்த பார்வையாளர் கண்காணிப்பு, சிறந்த அறிக்கையிடல், சிறந்த கூடுதல் உதவி, உள்ளடக்க செயல்திறன் பற்றிய சிறந்த கணிப்பு ஆகியவற்றை வழங்க ஊடக நிறுவனங்களுக்கு ஏ.ஐ உதவுகிறது. இன்று விளம்பரதாரர்கள் பார்வையாளர்களின் எண்ணிக்கையை மட்டும் விரும்பவில்லை. அவர்கள் குறிப்பிட்ட பார்வையாளர்களை விரும்புகிறார்கள். குறிப்பிட்ட, இலக்கிலான பார்வையாளர்கள். சரியான நேரத்தில், சரியான ஆர்வங்களுடன் இருப்பவர்களை விரும்புகிறார்கள்,'' என டத்தோ ஶ்ரீ வொங் சுன் வய் கூறினார்.

செயற்கை நுண்ணறிவு, அதிக பார்வையாளர்களைக் கவர உதவியுள்ளது.

இது அதிக சந்தைகள், சந்தாதாரர்கள், ஆதரவாளர்கள் மற்றும் பார்வைகளாக மாற்றும் ஆற்றலைக் கொண்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)