கோலாலம்பூர், 18 ஜனவரி (பெர்னாமா) -- இன்று, சிலாங்கூர், ரவாங், பெர்சியாரான் கோத்தா எமரால்டில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் போலீசார் மூன்று குற்றவாளிகளைச் சுட்டு வீழ்த்தினர்.
நண்பகல் சுமார் 12.30 மணிக்கு நடந்த இச்சம்பவத்தில் அம்மூன்று சந்தேக நபர்களும் வழிப்பறி கொள்ளை மற்றும் வாகனங்களைத் திருடும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்ததாக சந்தேகிக்கப்படுவதாக புக்கிட் அமான் குற்றப்புலனாய்வுத்துறை இயக்குநர் டத்தோ ஶ்ரீ முஹம்ட் சுஹாய்லி முஹமட் சைன் தெரிவித்தார்.
அம்மூவரில் இருவர் 40 மற்றும் 43 வயதுடைய உள்நாட்டு ஆடவர்கள் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
மேலும், ஒருவரின் சுய விவர ஆவணம் எதுவும் கிடைக்காததால் அவர் இன்னும் அடையாளம் காணப்படவில்லை.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)