ஈப்போ, 18 ஜனவரி (பெர்னாமா) -- பேராக், கோலா குராவின் புலாவ் சங்கர் புசாரின் தென்மேற்கு கடற்கரையில், கிராங்களைத் திருடியதாக சந்தேகிக்கப்படும் இழுவை படகு ஒன்றைக் கோலா குராவ் கடல்சார் மண்டலத்தின் மலேசிய கடல்சார் அமலாக்க நிறுவனம், எபிஎம்எம் கைது செய்தது.
பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் உள்ளூர் மீன்பிடி படகுடன் மீனவர் ஒருவர், இன்று அதிகாலை கைது செய்யப்பட்டதாக கோலா குராவின் கடல்சார் மண்டல நடவடிக்கைகளின் துணை இயக்குநர், கடல்சார் லெப்டினன்ட் சியுஹாதா ஷரிப் கூறினார்.
2002ஆம் ஆண்டு மீன்பிடி சட்டத்தின் கீழ் சந்தேகத்திற்குரிய அம்மீனவர் குற்றம் புரிந்துள்ளதாக ஆய்வு முடிவுகள் காட்டுகின்றன.
காரணம், அம்மீனவர் கிராங் பிடிப்பதற்கான காலாவதியான உரிமத்தையும், குறிப்பிட்ட நேரத்திற்கு மாறாக வெளியே செயல்படும் குற்றத்தையும் புரிந்துள்ளார்.
குறித்த பகுதியில் கிராங்களைப் பிடித்துக் கொண்டிருந்த அந்தச் சந்தேகநபர், காலாவதியான உரிமத்தை வைத்திருந்ததோடு 10 கிலோகிராம் கிராங்களைத் திருடியுள்ளார் .
குற்றம் நிரூபிக்கப்பட்டால் அந்நபருக்கு 10,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்படுவதோடு, ஓராண்டுக்கு மேல் சிறைத்தண்டனையும் வழங்கப்படும்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)