பொலிவியா, 13 மார்ச் (பெர்னாமா) -- பொலிவியாவில் உள்ள வியாச்சா மலைப்பகுதியில் ஏற்பட்ட மோசமான வானிலை காரணத்தினால் அப்பகுதியைச் சேர்ந்த 6,000-க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து பெய்த கனமழையினால், அங்குள்ள மக்களின் வீடுகளும் விவசாய நிலங்களும் வெள்ளத்தில் மூழ்கி பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளன.
அப்பகுதி மக்களின் முதன்மை விவசாய உற்பத்தியான உருளைக் கிழங்குகள் மற்றும் பார்லி, வெள்ளத்தினால் முற்றாக அழிந்தன.
மேலும், ஆறுகளில் பெருக்கெடுத்து ஓடிய நீர், அப்பகுதியைச் சுற்றியுள்ள வீடுகளையும் மூழ்கடித்ததால், ஆயிரக்கணக்கானோர் தங்களின் உடைமைகளை இழந்துள்ளனர்.
தென் அமெரிக்கா நாடுகளில் மழைக்காலத்தின் போது மிகவும் பாதிக்கப்பட்ட நாடுகளில் பொலிவியாவும் ஒன்றாகும்.
கடந்தாண்டு நவம்பர் மாதம் முதல் 40 இறப்புகளைப் பதிவு செய்துள்ள நிலையில், வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக நாடு முழுவதிலும் உள்ள 163,193 குடும்பங்கள் இடம்பெயர வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)