உலகம்

பட்டாணியில் இரண்டு குண்டு வெடிப்புகள், ஒன்பது போலீசார் காயம்

14/03/2025 07:07 PM

பட்டாணி, 14 மார்ச் (பெர்னாமா) -- தெற்கு தாய்லாந்து, பட்டாணி மாகாணம், மேலன் மாவட்டத்தில் இன்று அதிகாலை நிகழ்ந்த இரண்டு குண்டு வெடிப்புகளில், ஒன்பது போலீஸ் உறுப்பினர்கள் காயமடைந்தனர்.

முகிம் முவாங் தியாவில் உள்ள கம்போங் பெலக்ப்ரூவில், போலீசார் பாதுகாப்பு சோதனைகளை மேற்கொண்டிருந்தபோது, உள்ளூர் நேரப்படி காலை மணி 8.50-க்கு முதல் வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது.

அச்சம்பவத்தில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த ஒன்பது போலீஸ் உறுப்பினர்கள் காயமடைந்ததாக,  மேலன் மாவட்ட போலீஸ் தலைவர், கர்னல் பன்யா உடாபாவோ தெரிவித்தார். 

20 நிமிடங்களுக்குப் பின்னர், அருகிலுள்ள சாலையில் மற்றொரு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது.

அவ்விரு குண்டுகளும் சாலை மின்கம்பத்தில் பொருத்தப்பட்டிருப்பது, தொடக்கக் கட்ட விசாரணையில் தெரிய வந்தது.

காயமடைந்த அனைத்து போலீஸ் உறுப்பினர்களும், சிகிச்சைக்காக மேலன் மருத்துமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

--  பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)