பொது

இனப் பிரச்சனைகள் உடனடியாக தீர்க்கப்பட வேண்டும்

18/03/2026 08:32 PM

புத்ராஜெயா, 18 மார்ச் (பெர்னாமா) -- ஒரு முழுமையான மற்றும் பயனளிக்கும் நல்லிணக்க முயற்சிக்கு வழி வகுக்கும் வகையில் இனப் பிரச்சனைகள் உடனடியாக தீர்க்கப்பட வேண்டும் என்று மலாய் மற்றும் இந்திய சமூகங்களைப் பிரதிநிதிக்கும் சில அரசு சார்பற்ற நிறுவனங்கள் இணக்கம் தெரிவித்துள்ளன.

இன்று புத்ராஜெயாவில் சுமார் 4 மணி நேரம் நடைபெற்ற ஹார்மொனி மடானி எனப்படும் கலந்துரையாடல் நிகழ்ச்சியின் "முதல் சுற்று" பேச்சுவார்த்தை, பதற்றத்தைத் தணிக்கவும், ஒன்றிணைந்து முக்கிய விவகாரங்களைக் கையாள்வதற்கான தொடக்கப் படியாகவும் அமைந்தது.

வெளித் தரப்பினரின் தலையீடு இல்லாமல், இரு சமூகத்தினரும் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு இந்த கலந்துரையாடல் வாய்ப்பளித்ததாக மலேசிய முஸ்லிம் வழக்கறிஞர் சங்கத்தின் தலைவர் டத்தோ ஜைனுல் ரிஜால் அபு பக்கார் கூறினார்.

இதனிடையே, தீர்வுக்கான நடவடிக்கைகள் குறித்து, அடுத்த கட்டத்தில் பேச்சுவார்த்தைகளை தொடர இரு தரப்பினரும் கொள்கை அளவில் ஒப்புக்கொண்டதாக மஹிமா எனப்படும் மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து அமைப்புகள் பேரவையின் தலைவர் டத்தோ சிவகுமார் நடராஜா தெரிவித்தார்.

 

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)