தெமர்லோ, 09 ஏப்ரல் (பெர்னாமா) -- பகாங்கின் தெமர்லோ நகராண்மைக் கழக அரங்கில் நடைபெற்ற இவ்வாட்டத்தில், ஶ்ரீ பகாங் எப்.சி அதன் கோல் வேட்டையை 37-வது நிமிடத்தில் இருந்து தொடங்கியது.
முதல் பாதி முடியும் தருணத்தில், 45-வது நிமிடத்தில் அவ்வணியின் இரண்டாம் கோல் அடிக்கப்பட்டு ஆட்டம் 2-0 என்றானது.
அதே உற்சாகத்தோடு இரண்டாம் பாதியில் களமிறங்கிய ஶ்ரீ பகாங் எப்.சியின் மூன்றாம் கோலை தி சரவணன் அடித்த வேளையில்...
அடுத்த எட்டு நிமிடங்களில், முதல் கோல் அடித்த செர்கிடோ அகுரோ மீண்டும் தனது இரண்டாம் கோலை அடித்தபோது ஆட்டம் 4-0 என்ற நிலைக்கு வந்தது.
பின்னர், 77-வது நிமிடம் சொந்த கோலின் வழி ஐந்தாம் கோலைப் பெற்ற பகாங், தனது ஆறாவது கோலை 84-ஆம் நிமிடம் போட்டு கெடாவை திக்கு முக்காட வைத்தது.
இதனிடையே, கோத்தா கினாபாலுவின் லிக்காஸ் அரங்கில் நடைபெற்ற மற்றுமொரு ஆட்டத்தில் சபா 1-0. எனும் நிலையில், பிடிஆர்எம்மை- தோற்கடித்தது.
சபாவின் ஒரே கோல் 42-வது நிமிடம் போடப்பட்ட வேளையில், இந்த வெற்றியின் வழி அவ்வணி 39 புள்ளிகளோடு பட்டியலில் மூன்றாம் இடத்தை தற்காத்தது,
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)