மொனாக்கொ, 09 ஏப்ரல் பெர்னாமா -- தொடர்வது மொந்தி கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி...
நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தத் தவறியதால், முதல் சுற்றுடன் வெளியேறி உள்ளார் ஜெர்மனியின் டென்னிஸ் வீரர் அலெக்சண்டர் ஸ்வெரெவ்.
இன்று அதிகாலை நடைபெற்ற முதல் சுற்று ஆட்டத்தில், அவர் இத்தாலியின் மெத்தியோ பெரெட்டினியிடம் அதிர்ச்சி தோல்வி கண்டார்.
மொனாக்கொவில் நடைபெற்று வரும் இப்போட்டியில், உலக தரவரிசையில் இரண்டாம் இடத்தில் உள்ள ஸ்வெரெவ் இத்தாலிய ஆட்டக்காரரை வீழ்த்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
அதன் படியே, முதல் செட்டை 6-2 எனும் நிலையில் அவர் வெற்றிக் கொண்டார்.
ஆனால், அடுத்த இரு செட்களில், அந்த வெற்றியை தற்காத்துகொள்ளாத ஸ்வெரெவ்.
3-6, 5-7 எனும் நிலையில் பெரெட்டினியிடம் தோல்வி கண்டார்.
ஜனவரியில், ஆஸ்திரேலிய பொது டென்னிஸ் போட்டியின் இறுதி சுற்றில் யன்னிக் சின்னரிடம் தோல்வி கண்ட ஸ்வெரெவ் கடந்த12 போட்டிகளில் ஆறில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளார்
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)