பொது

பிரதமருக்கு சட்டத்துறையில் முனைவர் பட்டம்

11/04/2025 06:17 PM

கோம்பாக், 11 ஏப்ரல் (பெர்னாமா) - பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அமெரிக்க Shenandoah பல்கலைக்கழகத்திடம் இருந்து சட்டத்துறையில் மரியாதைக்குரிய முனைவர் பட்டத்தைப் பெற்றார்.

இன்று, கோம்பாக், மலேசிய அனைத்துலக இஸ்லாமியப் பல்கலைக்கழகம், UIAM-இல் Shenandoah பல்கலைக்கழகத்தின் தலைவர் Dr Tracy Fitzsimmons அப்பட்டத்தை வழங்கினார்.

அந்நிகழ்ச்சியில் நன்றியுரை ஆற்றிய அன்வார், தாம் பிரதமர் பதவி வகிப்பதால் தமக்கு அந்தப் பட்டம் வழங்கப்படவில்லை.

மாறாக, மனித அடிப்படை உரிமை தொடர்பான பணிகளை, பல்கலைக்கழகத் தரப்புடன் இணைந்து நீண்டகாலமாக மேற்கொண்டு வருவதை சுட்டிக்காட்டினார். 

"மலேசியாவிற்கும், பொதுவாக மனிதகுலத்திற்கும் சுதந்திரம், மனித கண்ணியம் ஆகியவற்றை மேம்படுத்துவதற்காக, பல ஆண்டுகளாக நாம் இணைந்து செய்யும் பணிக்காக. லட்சியம் மிகுந்த கருத்து. ஆனால், நாங்கள் ஒரு தலைமுறையிலிருந்து வந்தவர்கள், பரந்த இலட்சியவாதிகள், மிகவும் உறுதியானவர்கள் மற்றும் நோக்கத்தின் அவசியத்தை மிகத் தெளிவாகக் கொண்டவர்கள்," என்றார் அவர்.

இந்நிகழ்ச்சிக்குப் பிறகு அன்வார், ‘Meet Anwar@IIUM: A Special Homecoming’ என்ற பல்கலைக்கழக மாணவர்கள் உடனான உரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)