ப்ளாதொ, 15 ஏப்ரல் (பெர்னாமா) -- நேற்று, நைஜீரியாவின் வடக்கு மாநிலம் ப்ளாதொவில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில், சுமார் 15 பேர் கொல்லப்பட்டதுடன், அனைவரும் பெரிய புதைகுழி ஒன்றில் அடக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
ப்ளாதொ, பஸ்ஸா மாவட்டத்தில் உள்ள ஜிக் மற்றும் கிமக்பா கிராமங்களில் 51 உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், மேலும் பலர் காயங்களுக்கு ஆளாகியிருப்பதாக, குடியிருப்பாளர்கள் சிலர் தெரிவித்தனர்.
விவசாயிகளுக்கும் கால்நடை வளர்ப்பவர்களுக்கும் வன்முறை நீடித்துவரும் ப்ளாதொவில் பல நாட்கள் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டு தாக்குதலில் குறைந்தது 52 பேர் பலியாகியுள்ளனர்.
அதோடு, சுமார் 2,000 பேர் இடம்பெயர்ந்துள்ளதாகவும், தேசிய அவசரகால நிறுவனம் கடந்த வாரம் அறிவித்திருந்தது.
எனினும், போலீஸ் தரப்பு செய்தி தொடர்பாளர் தரப்பில் எவ்வித கருத்தும் வெளியிடப்படவில்லை.
பல்லினம் மற்றும் மதங்களைக் கொண்ட நைஜீரியாவின் Middle Belt என்றழைக்கப்படும் ப்ளாதொ மாநிலத்தில், கடந்த சில ஆண்டுகளாக இனங்களுக்கு இடையில் நடந்த மோதல்களினால் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)