ஒடிசா, 16 மார்ச் (பெர்னாமா) -- கிழக்கு இந்திய மாநிலமான ஒடிசாவில் உள்ள ஒரு மருத்துவமனையில், இன்று, திங்கட்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 10 பேர் உயிரிழந்தனர்.
மேலும், ஐவர் படுகாயமடைந்தனர்.
எனினும், அவர்களின் காயம் தீ விபத்தில் ஏற்பட்டதா, அல்லது முந்தைய காயங்களால் ஏற்பட்டதா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
திங்கட்கிழமை அதிகாலையில் ஏற்பட்ட மின்சாரக் கோளாரினால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று, மருத்துவமனையை பார்வையிட்ட பிறகு அம்மாநில முதல்வர் மோகன் சரண் மஜ்ஹி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)