கோலாலம்பூர், 18 ஏப்ரல் (பெர்னாமா) -- பூப்பந்து ஆட்டத்தின் நாட்டின் கலப்பு இரட்டையர்கள் குறித்த செய்தி..
சான் வென் ஸெ உடன் புதிதாக இணைந்து மூன்று போட்டிகளில் மட்டுமே பங்குபெற வாய்ப்பு கிடைத்துள்ளதாக அவரின் ஜோடி செங் தாங் ஜி தெரிவித்துள்ளார்.
இனி வரும் ஆட்டங்களில் வென் ஸெ யாரோடு இணைந்து விளையாடினாலும் வெற்றி பெறுவதற்கான கடப்பாட்டை கொண்டிருப்பார் என்று தாம் நம்புவதாவும் அவர் கூறியுள்ளார்.
அதேவேளையில், வரும் மே 27 தொடங்கி ஜூன் முதலாம் தேதிவரை நடைபெறும் சிங்கப்பூர் பொது பூப்பந்து போட்டியில், தாம் மீண்டும் தமது பழைய ஜோடியான செங் தாங் ஜிஉடன் இணைந்து போட்டியிடவிருக்கின்றார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)