உலகம்

உக்ரேனில் - ரஷ்யா மோதல் விரைவில் முடிவுக்கு வருமா?

21/04/2025 03:43 PM

ரஷ்யா, 21 ஏப்ரல் (பெர்னாமா) --   இந்த வார இறுதிக்குள் உக்ரேனில் மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அமைதி ஒப்பந்தத்தில் ரஷ்யா கையெழுத்திடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் வழி மூன்று ஆண்டுகளுக்கும் மேல் உக்ரேனுக்கு எதிராக ரஷ்யா கொண்டிருக்கும் ஆக்கிரமிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று நம்ப்படுகின்றது.

அமெரிக்க, ரஷ்யா மற்றும் உக்ரேன் ஆகிய மூன்று நாடுகளையும் உள்ளடக்கிய வணிக உறவுகளின் தொடக்கம் குறித்து அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப் தமது அதிகாரப்பூர்வ சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார்.

இதற்கு முன்னர் உக்ரேனுடான பிரச்சனையைத் தீர்ப்பதற்கான பேச்சுகளில் மாஸ்கோவின் பிரதிநிதியாக வாஷிங்டன் செயல்பட்டது.

அதேவேளையில் இந்த மோதல் ஏற்படுவதற்கு முன்னாள் அமெரிக்க அதிபர் ஜோ பைடனே காரணம் என்று டிரம்ப் குற்றஞ்சாட்டியுள்ளார்

உக்ரேன்-ரஷ்யா அமைதித் திட்டம் பல நாடுகளாலும் உலக அமைப்புகளாலும் நீண்ட காலமாகக் கூறப்பட்டு வருகிறது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)