ரோம் , 24 ஏப்ரல் (பெர்னாமா) -- காலஞ்சென்ற கத்தோலிக்கத் திருச்சபையின் தலைவர் போப்பாண்டவர் பிரான்சின் நல்லுடலுக்கு அஞ்சலி செலுத்தி வரும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், அஞ்சலி செலுத்தும் கால நேரம் நீட்டிக்கப்படும் என்று வத்திகன் அறிவித்திருக்கிறது.
வெள்ளிக்கிழமை மாலை மணி 7 வரை பொதுமக்கள் அவரின் நல்லுடலுக்கு அஞ்சலி செலுத்தலாம் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது நள்ளிரவு வரை அஞ்சலி செலுத்துவதற்கான நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இறுதி சடங்கு வரும் 26-ஆம் தேதி சனிக்கிழமை நடைபெறவுள்ள நிலையில், மக்கள் அவரின் நல்லுடலுக்கு அஞ்சலி செலுத்தி நீண்ட வரிசையில் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
பல மணி நேரங்கள் காத்திருந்து, மக்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
போப்பாண்டவரின் விருப்பப்படி அவரது உடல் ரோம் நகரில் உள்ள செயிண்ட் பீட்டர்ஸ் பசிலிக்கா தேவாலாயத்தில் வைக்கப்பட்டுள்ளது.
சாண்டா மரியா மேகியோர் தேவாலயத்தில் அவரின் உடல் அடக்கம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.
88 வயதான போப்பாண்டவர் பிரான்சிஸ் பக்கவாதத்தால் திங்கட்கிழமை உயிரிழந்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ) 502)