காஷ்மீர் , 24 ஏப்ரல் (பெர்னாமா) -- இந்தியா கட்டுபாட்டில் உள்ள ஜம்மு காஷ்மீரின் பெஹல்காம் எனுமிடத்தில் சுற்றுலா பயணிகளை குறிவைத்து தீவிரவாதிகள் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தைத் தொடர்ந்து, சுற்றுப் பயணிகள் அங்கிருந்து புறப்படுவதைக் காண முடிந்தது.
இச்சம்பவத்தில், சுமார் 28 பேர் உயிரிழந்ததோடு, குறைந்தது 17 காயத்திற்கு ஆளாகினர்.
உயிரிழந்தவர்களில் இந்தியாவைச் சேர்ந்த 25 பேரும் ஒரு நேபாளியும் அடங்குவர் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் பதற்றத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளதோடு, விரைவில் வீடு திரும்ப ஆவலுடன் இருப்பதாக அங்கிருந்து வெளியேறி வரும் சுற்றுப் பயணிகளில் ஒருவர் கூறினார்.
இந்நிலையில், தாக்குதலுக்கு காரணமானவர்களைத் தேடும் பணிகளை இந்தியப் படைகள் தீவிரமான மேற்கொண்டு வருவதால், இந்தியக் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீர் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
2008ஆம் ஆண்டு மும்பை துப்பாக்கிச் சூட்டுக்குச் சம்பவத்திற்குப் பிறகு, இந்தியாவில் பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட மிக மோசமான தாக்குதலாக இது கருதப்படுகிறது.
மேலும், கடந்த சில ஆண்டுகளில் இந்தியாவுக்கு எதிரான தாக்குதல்கள் குறைந்து வருவதால், சுற்றுலா வளர்ச்சியடைந்துள்ள காஷ்மீரில் இருந்த அமைதி இச்சம்பவத்தினால் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, இக்கொடியத் தாக்குதலுக்கு மூன்று இந்திய நகரங்களைச் சேர்ந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் பாகிஸ்தானை குற்றம் சாட்டியுள்ளனர்.
பூனே, அம்ரிட்சார் மற்றும் சன்டிகர் ஆகிய நகரங்களில் ஒன்றுகூடிய ஆர்ப்பாட்டக்காரர்கள், பாகிஸ்தான் கொடிகளை எரித்தும், "Down with Pakistan என்று கோஷமிட்டவாரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இந்திய நிர்வாகத்திற்கு உட்பட்ட காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட இத்தாக்குதலுக்கு, The ரெரிஸ்தன்ஸ் ஃபிரான்ட் என்றும் அழைக்கப்படும் காஷ்மீர் ரெரிஸ்தன்ஸ் பொறுப்பேற்றுள்ளது.
இந்நிலையில், தங்கள் தரப்பு காஷ்மீரில் தீவிரவாதத்தையும் வன்முறையையும் ஆதரிப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டை பாகிஸ்தான் மறுத்துள்ளது.
மேலும், அங்குள்ள கிளர்ச்சியாளர்களுக்கு தார்மீக, அரசியல் மற்றும் அரச தந்திர ஆதரவை மட்டுமே வழங்குவதாக பாகிஸ்தான் குறிப்பிட்டுள்ளது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ) 502)