உலகம்

ஜபாலியாவில்போலீஸ் நிலையம் மீது தாக்குதல்; 10 பேர் பலி

24/04/2025 07:26 PM

கெய்ரோ , 24 ஏப்ரல் (பெர்னாமா) -- வடக்கு காசா பகுதியில் உள்ள ஜபாலியாவில் ஒரு போலீஸ் நிலையத்தை குறி வைத்து இஸ்ரேல் வியாழக்கிழமை வான்வழி தாக்குதலை நடத்தியது.

இதில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சந்தைக்கு அருகில் அமைந்துள்ள போலீஸ் நிலையத்தை இரு இஸ்ரேலிய ஏவுகணைகள் தாக்கின.

இதில் அதிகமானோர் காயமடைந்த நிலையில் 10 பேர் பலியானதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

உயிரிழந்தவர்களின் அடையாளங்கள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ) 502)