வட்டிகன், 27 ஏப்ரல் (பெர்னாமா) -- ரோமில் உள்ள புனித மேரி மேஜர் பேராலயம் ஞாயிற்றுக்கிழமை மறைந்த போப் பிரான்சிஸ் அடக்கம் செய்யப்பட்ட ஒரு நாளுக்குப் பிறகு, அவரது கல்லறையில் மரியாதை செலுத்த பார்வையாளர்களை அனுமதித்தது.
அதற்காக அந்த தேவாலயத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் அதிகாலையிலேயே வரிசையில் காத்திருந்தனர்.
சனிக்கிழமை, ST. மேரி மேஜர் பசிலிக்காவில் நடைபெற்ற கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப்பாண்டவர் பிரான்சிஸின் நல்லுடலை அடக்கம் செய்யும் சடங்கிற்கு, வட்டிகன் கேமர்லிகோ, ஐரிஷ் வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க கார்டினல், கெவின் ஃபெரல் தலைமையேற்றார்.
சில கார்டினல்களும், போப் வட்டிகன் குடும்பத்தின் நெருங்கிய தொடர்பு உள்ளவர்களும் மட்டுமே அச்சடங்கில் பங்கேற்றனர்.
முன்னதாக, போப்பின் இறுதி ஊர்வல அணிவகுப்பு வட்டிகனிலிருந்து புறப்பட்டு, ரோம் வழியாக St. மேரி மேஜர் பசிலிக்காவிற்குச் சென்றது.
போப் பிரான்சிஸின் இறுதிச் சடங்கில் சுமார் 200,000 பேர் கலந்து கொண்டதாக வட்டிகன் தெரிவித்தது.
கடந்த 100 ஆண்டுகளில் வட்டிகனுக்கு வெளியே அடக்கம் செய்யப்பட்ட முதல் போப், பிரான்சிஸ் ஆவார்.
இதனிடையே, போப் பிரான்சிஸின் சொந்த ஊரான அர்ஜென்தினாவிலும் மக்கள் கண்ணீர் மல்க இறுதி அஞ்சலி செய்யப்பட்டது.
போப் பிரான்சிஸுக்கு விடைகொடுக்கும் விதமாக அர்ஜென்டின மக்கள் பிளாசா டி மாயோவில் பொது திருப்பலியில் கலந்து கொண்டனர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)