வான்கூவர், 28 ஏப்ரல் (பெர்னாமா) - கனடா, வான்கூவர் நகரில் ஓட்டுநர் ஒருவர் மக்கள் கூட்டத்திற்குள் காரைச் செலுத்தியதில் 11 பேர் உயிரிழந்தனர்.
மேலும் பலர் காயமுற்றதாக அந்நாட்டு போலீஸ் தெரிவித்தது.
சனிக்கிழமை, பிலிப்பைன்ஸ் சமூகத்தினர் ஏற்பாடு செய்த விழாவில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
காரை செலுத்திய ஆடவர் மனநலம் பாதிக்கப்பட்டதற்கான முந்தைய பதிவுகளை கொண்டிருப்பதாக வான்கூவர் இடைக்கால போலீஸ் தலைமை அதிகாரி ஸ்டீவ் ராய் கூறினார்.
"காவலில் உள்ள நபருக்கு, மனநலம் தொடர்பாக போலீஸ் மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு நிபுணர்களுடன் குறிப்பிடத்தக்க தொடர்புகள் இருந்ததை நான் உங்களுக்குச் சொல்ல முடியும்,'' என்றார் அவர்.
ஆகவே, இச்சம்பத்தில் பயங்கரவாத கூறுகள் இருப்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று போலீஸ் தெரிவித்தது.
காயமடைந்த சிலரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என்று அஞ்சப்படுகிறது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)