விளையாட்டு

சுடிர்மான் கிண்ணம்; மலேசியாவுக்கு வெற்றிகரமான துவக்கம்

28/04/2025 05:56 PM

சீனா, 28 ஏப்ரல் (பெர்னாமா) --   சீனா, ஜியாமென்னில் நடைபெறும் 2025 சுடிர்மான் கிண்ண பூப்பந்து போட்டியை மலேசியா வெற்றிகரமாக துவங்கியுள்ளது.

இன்று காலை, C குழுவுக்கான ஆட்டத்தில் மலேசியா பிரான்ஸ்சை 5-0 என்ற நிலையில் தோற்கடித்தது.

தேசிய ஆடவர் இரட்டையர் கோ சி ஃபெய்-நுர் இசுடின் முஹம்ட் ரும்சனி, உலகின் 58-வது இடத்தில் இருக்கும் மெயில் கட்டோயன்-லூகாஸ் ரெனோயர் ஜோடியுடன் மோதினர்.

இதில் 21-11, 21-9 என்ற புள்ளிகளில் சி ஃபெய்-நுர் இசுடின்  வெற்றி பெற்றனர்.

மகளிர் ஒற்றையர் பிரிவில் கோ ஜின் வெய், 21-10, 21-19 என்ற புள்ளிகளில் லியோனிஸ் ஹுயெட்டைத் தோற்கடித்தார்.

உலகின் 26-வது இடத்தில் உள்ள தேசிய ஆடவர் ஒற்றையரான லியொங் ஜுன் ஹொ, 22-20, 21-19 என்ற புள்ளிகளில் அர்னாட் மெர்க்கிளைத் தோற்கடித்தார்.

மகளிருக்கான இரட்டையர் பிரிவில் நாட்டின் பெர்லிதான்-எம்.தினா ஜோடி 21-13, 21-10 என்ற புள்ளிகளில் வெற்றி பெற்றது.

நாட்டின் கலப்பு இரட்டையரான கோ சூன் ஹுவாட்-சிவொன் லை ஜெம்மி ஜோடியும், 21-7, 21-19 என்ற புள்ளிகளில் வெற்றி பெற்றனர்.

நாளை மலேசியா ஆஸ்திரேலியாவுடன் மோதவுள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)