பொது

பெர்சத்து வங்கி கணக்கில் லட்சக் கணக்கான ரிங்கிட் செலுத்தப்பட்டதை அரசு தரப்பு நிரூபிக்கும்

09/03/2026 04:41 PM

கோலாலம்பூர், 09 மார்ச் (பெர்னாமா) --  பதவி துஷ்பிரயோகம் மற்றும் கள்ளப்பண பரிமாற்றம் தொடர்பான ஏழு குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் முன்னாள் பிரதமர் டான் ஶ்ரீ முகிடின் யாசின் மீதான விசாரணையில், பெர்சத்து கட்சி கணக்குகளுக்கு லட்சக் கணக்கான ரிங்கிட் அனுப்பப்பட்டதற்கான விளக்கங்களை அரசு தரப்பு முன்வைக்கும்.

அப்போது Jana Wibawa திட்டத்தில் மறைமுக நலன் கொண்ட பெர்சத்து தலைவராகவும் பிரதமராகவும் டான் ஶ்ரீ முகிடின் இருந்ததாக அரசு தரப்பு துணை வழக்கறிஞர், டத்தோ வான் ஷஹாருடின் வான் லடின் தெரிவித்தார்.

குற்றம் சாட்டப்பட்டவரின் கூட்ட விவரிக்குறிப்பின்படி மட்டுமே அடிப்படையாகக் கொண்டு அப்போதைய நிதியமைச்சர் செயல்பட்டார் என்றும், எடுக்கப்பட்ட முடிவுகளிலிருந்து எந்த லாபமும் பெறவில்லை என்றும் தங்கள் தரப்புக் காட்டும் என்றும் டத்தோ வான் ஷஹாருடின் கூறினார்.

வழக்கை நிரூபிக்க அரசு தரப்பு எழுத்துப்பூர்வ ஆவண விளக்கங்கள் மற்றும் பதிவுகள், நேரடி விளக்கங்கள் மற்றும் சூழ்நிலைக்கு ஏற்ற விளக்கங்கள் ஆகியவற்றை சார்ந்திருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

விசாரணை முழுவதும் விளக்கமளிக்க சுமார் 30 சாட்சிகள் அழைக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சம்பவத்தின்போது பிரதமர் மற்றும் பெர்சத்து தலைவர் பதவிகளை வகித்த டான் ஸ்ரீ முகிடின், Jana Wibawa திட்டத்துடன் தொடர்புடைய 22 கோடியே 53 லட்சம் ரிங்கிட் கையூட்டு பெற தனது பதவியைப் பயன்படுத்தியதாக நான்கு குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)