ஜோகூர் பாரு, 28 ஏப்ரல் (பெர்னாமா) -- ஒரே பருவத்தில் சூப்பர் லீக், FA கிண்ணம், மலேசிய கிண்ணம் ஆகிய மூன்று முக்கிய மலேசிய லீக் பட்டங்களை வென்றுள்ள ஜோகூரின் JDT அதன் கொண்டாட்ட களிப்பில் உள்ளது.
தொடர்ச்சியாக 11-வது முறை, triple treble அங்கீகாரத்தை பூர்த்தி செய்து, ஜே.டி.தி உள்ளூர் காற்பந்து அரங்கில் புதிய வரலாற்றையும் படைத்துள்ளதை அதன் ரசிகர்கள் நேற்று சுல்தான் இப்ராஜிம் அரங்கில் கொண்டாடினர்.
இந்த பிரமாண்டமான கொண்டாட்டத்தை காண்பதற்காக சுமார் 30 ஆயிரம் பேர் அந்த அரங்கில் கூறினர்.
இதற்கு முன்னர் கடந்த 2007 மற்றும் 2008ஆம் ஆண்டுகளில் double treble அங்கீகாரத்தை கெடா வென்றிருந்தது.
மலேசிய லீக் கிண்ணப் போட்டியில், ஶ்ரீ பகாங்கை 2 -1 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி, ஜே.டி.தி தனது வெற்றியைத் தொடர்ந்து நிலைநாட்டியது.
-- பெர்னாமா