இஸ்லாமாபாத், 30 ஏப்ரல் (பெர்னாமா) -- தனது நாட்டிற்குள் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தில் இந்தியா ஈடுபட்டுள்ளதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது.
பாகிஸ்தானில் பயங்கரவாதம் தொடர்ந்து நிலைத்திருக்க இந்தியா ஆதரவு வழங்கியதற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும், பாகிஸ்தான் இராணுவத்தின் பேச்சாளர் அஹ்மாட் ஷரீஃப் சௌத்ரி தெரிவித்தார்.
"இந்தியா ஒரு நாடாக பாகிஸ்தானுக்குள் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை மேற்கொள்வதில் எவ்வாறு ஈடுபட்டுள்ளது என்பதற்கான தற்போதைய சூழ்நிலையுடன் மிக முக்கியமான விவரங்களை உங்களுக்கு வழங்குவதே இதன் (பத்திரிகையாளர் சந்திப்பு) நோக்கமாகும்", என்று அவர் கூறினார்.
பாகிஸ்தானில் மீட்கப்பட்ட பொருள்களின் தடயவியல் பகுப்பாய்வு அந்நாட்டிற்குள் நிகழ்ந்த பயங்கரவாத சம்பவங்களில் நான்கு இந்திய ராணுவ அதிகாரிகளின் தொடர்பு இருப்பதைக் காட்டுவதாகவும் அவர் கூறினார்.
மேலும், பஹல்கம் தாக்குதலுக்கும் பாகிஸ்தானுக்கும் தொடர்பு இருப்பதாக இந்தியா குற்றம் சாட்டியிருக்கும் நிலையில், அதற்கான ஆதராங்களை இதுவரை வெளியிடவில்லை என்றும் அவர் சாடினார்.
"பஹல்கம் சம்பவம் நிகழ்ந்து ஏழு நாள்கள் கடந்துவிட்டன. ஆனால் இதுவரை பாகிஸ்தானுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை ஆதரிக்க எந்த ஆதாரமும் வழங்கப்படவில்லை", என்றார் அவர்.
பஹல்கம் தாக்குதலுக்குப் பின்னர், பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் நிலவி வந்த நீண்ட கால நெருக்கடி அதிகரித்துள்ளது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)