பொது

தாயகம் திரும்பினார் மாலத்தீவு அதிபர்

30/04/2025 03:18 PM

சிப்பாங் , 30 ஏப்ரல் (பெர்னாமா) -- மலேசியாவுக்கான நான்கு நாட்கள் அதிகாரப்பூர்வ பயணத்தை நிறைவு செய்து மாலத்தீவு அதிபர் டாக்டர் முஹ்மட் முய்சு இன்று தாயகம் திரும்பினார்.

காலை மணி 8 அளவில், கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திலிருந்து, முய்சுவும் அவரது பேராளர்களும் மாலத்தீவு ஏர்லைன்ஸ் விமானம் வழியாக புறப்பட்டனர்.

காலை மணி 7.45 அளவில் பூங்கா ராயா வளாகத்தில் முஹ்மட் முய்சுவை வழியனுப்பி வைப்பதற்கு, அரச மலேசிய இராணுவப் படையின் முதலாவது பத்தோலியனின் மரியாதை அணிவகுப்பு நடைபெற்றது.

இந்தப் பயணம் முழுவதும் முய்சு உடன் இருந்த, சுகாதார அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர்  சுல்கிப்ளி அஹ்மட், அவரையும் அவரது குழுவினரையும் வழியனுப்பி வைத்தார்.

அவரின் வருகையின்போது, இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வகையில், சுற்றுலா, சுகாதாரம் மற்றும் விளையாட்டுத் துறைகளை உள்ளடக்கிய..

மூன்று புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் இரண்டு பரிமாற்றக் குறிப்புகளும் கையெழுத்தாகி பரிமாறிக் கொள்ளப்பட்டதை முய்சு பார்வையிட்டார்.

"மலேசியாவிற்கு வருகை தரும் 2026 " பிரச்சாரத்தின் மூலம் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதோடு, இரு நாடுகளுக்கும் இடையே சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகளை கண்டறியப்படும் என்று அண்மையில் நடைபெற்ற கூட்டு செய்தியாளர் சந்திப்பில் Muizzu-வும் டத்தோஸ்ரீ அன்வாரும் கூறினர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ) 502)