உலகம்

கொல்கத்தாவில் உள்ள விடுதியில் தீ; 14 பேர் பலி

30/04/2025 07:03 PM

புது டெல்லி, 30 ஏப்ரல் (பெர்னாமா) -- இந்தியா, கொல்கத்தாவில் உள்ள ஒரு விடுதியில் நிகழ்ந்த தீ விபத்து குறைந்தது 14 பேர் உயிரிழந்த நிலையில் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். 

மத்திய கொல்கத்தாவில் உள்ள ஒரு கட்டிடத்தில் செவ்வாய்கிழமை தீ ஏற்பட்டது.

தீ புதன்கிழமை காலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மத்திய கொல்கத்தாவில் உள்ள ஒரு கட்டிடத்தில் செவ்வாய்க்கிழமை மாலை ஏற்பட்ட தீ விபத்து புதன்கிழமை காலை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

தீ ஏற்பட்ட இடத்தில் இருந்து 99 பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ) 502)