உலகம்

காஷ்மீர்; சுற்றுலா தளங்களின் தங்கும் விடுதிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன

30/04/2025 04:16 PM

ஶ்ரீநகர், 30 ஏப்ரல் (பெர்னாமா) --   இந்தியக் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரில் பாதிக்கும் மேற்பட்ட சுற்றுலா தளங்களின் தங்கும் விடுதிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

கடந்த வாரம் சுற்றுலாப் பயணிகள் மீது மேற்கொள்ளப்பட்ட கொடிய தாக்குதலால் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகமாகும் பதற்றங்களைத் தொடர்ந்து அதிகாரிகள் அங்கு பாதுகாப்பைப் பலப்படுத்தியுள்ளனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட 87 தங்கும் விடுதிகளில் 48 விடுதிகளை மூடுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாக நிர்வாக அதிகாரிகளும் போலீசாரும் தெரிவித்தனர்.

ஆனால், இவை எவ்வளவு காலம் மூடப்படும் என்றும், மீண்டும் சுற்றுலா பயணிகளுக்கு திறக்கப்படும் என்பதை அவர்கள் குறிப்பிடவில்லை.

பஹல்கமில், 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்ட ஒரு வார காலத்திற்கு பிறகு இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)