புக்கிட் ஜாலில், 01 மே (பெர்னாமா) - ஒரு சிறந்த போட்டித்தன்மை வாய்ந்த நாட்டை உருவாக்குவதில் தொழிலாளர் வர்க்கமே முக்கிய தூண்டுகோள் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
தொழிற்சாலை, அரசாங்கத் துறை, சிகிச்சையகம் அல்லது வேறு எந்தத் துறையிலும் பணிபுரியும் ஒவ்வொரு தனிநபரும் மாற்றத்தை ஏற்படுத்துவதிலும் நாடு வெற்றி அடைவதிலும் முக்கிய பங்கு வகிப்பதை பிரதமர் சுட்டிக்காட்டினார்.
"தொழிலாளர்கள் உண்மையாக உழைப்பார்கள். விடாமுயற்சியுடன் இருப்பார்கள் என்று நான் நம்புகிறேன். நாம் மாற்றங்களையும் வெற்றிகளையும் பதிவு செய்திருந்தாலும், இந்நாடு இன்னும் பல சவால்களை எதிர்கொண்டு வருகிறது. தினசரி, கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் நாம் எதிர்கொள்கிறோம். அதிகரிக்கப்பட்ட வரி விதிப்பு தொடர்பான அமெரிக்க அதிபரின் முடிவோடு நாம் போராடுகிறோம். சிறப்பாக, விடாமுயற்சியுடனும் உண்மையாகவும் பணியாற்றுங்கள்,'' என்றார் அவர்.
இன்று, புக்கிட் ஜாலில் அக்ஸியாத்தா அரேனாவில் 2025-ஆம் ஆண்டு தேசிய தொழிலாளர் தினக் கொண்டாட்டத்தில் சிறப்புரை ஆற்றிய பிரதமர் அவ்வாறு கூறினார்.
“Pekerja Kesuma Bangsa” எனும் கருப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தொழிலாளர் தினக் கொண்டாட்டத்தில், பல்வேறு துறைகளைச் சேர்ந்த 10,000-க்கும் மேற்பட்ட பொது மற்றும் தனியார் ஊழியர்கள் பங்கேற்றனர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)